தென் இந்தியாவில் ரைசிடா குவாட்ரிஸ்பினோசா (Rhysida quadrispinosa), ரைசிடா கூர்கென்சிஸ் (Rhysida coorgensis) மற்றும் ரைசிடா நெய்யரென்சிஸ் (Rhysida neyyarensis) ஆகிய மூன்று புதிய பூரான் இனங்களை அறிவியலாளர்கள் விவரித்துள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள கூர்க்கின் நினைவாக ரைசிடா கூர்கென்சிஸ் என்றும், கேரளாவில் உள்ள நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தின் நினைவாக ரைசிடா நெய்யரென்சிஸ் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மூன்று புதிய இனங்கள் மூலம், இந்தியாவில் அறியப்பட்ட மொத்த ரைசிடா (Rhysida) இனங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.