TNPSC Thervupettagam

தென் மண்டல சபையின் கூட்டம் குறித்த அறிவிப்பு

August 22 , 2026 22 days 183 0
  • 31வது தென் மண்டல சபையின் கூட்டம் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற நிலையில் இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தென் மாநிலங்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார் என்பதோடு மேலும் நிதிப் பகிர்வில் நியாயமான மற்றும் சமமான சிகிச்சை அளிக்கப் பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
  • வளர்ச்சி, நிதி ஒழுக்கம் மற்றும் மக்கள் தொகை மாற்றம் உள்ளிட்ட மாநிலங்களின் தேவைகள் மற்றும் செயல்திறன் ஆகிய இரண்டையும் அடுத்த நிதிக்குழு கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
  • சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வரி விதிப்பில் மாநிலங்களுக்கு அதிக நெகிழ்வுத் தன்மை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், அரசியலமைப்பின் 279A(4)(e) சரத்தைக் குறிப்பிட்டார்.
  • மாநிலங்களுக்கு இடையிலான நதிகள் குறித்துப் பேசுகையில், கீழ்மடை மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், தீர்ப்பாயத் தீர்ப்புகள் மற்றும் சட்டப் பூர்வமான வழிமுறைகளை செயல் படுத்துவதையும் அவர் வலியுறுத்தினார்; மேலும் காவிரி மற்றும் முல்லைப் பெரியார் பிரச்சினைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • பொம்மசந்திராவிலிருந்து ஓசூர் வரையிலான உத்தேசிக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ நீட்டிப்பை மேற்கோள் காட்டி, தென் மாநிலங்களுக்கிடையே பொதுவான பொருளாதார மற்றும் தளவாடத் தொகுப்புகளை முன்மொழிந்த அவர், கடல்சார் பொருளாதாரம் மற்றும் நீலப் பொருளாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்