1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை உடன்படிக்கையின் கீழ், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) தென்னாப்பிரிக்காவின் வழக்கில் பிரேசில் தலையிட உள்ளது.
பிரேசில் ஆனது நடைபெற்று வரும் அட்டூழியங்களைக் கண்டித்ததோடு, சர்வதேசச் சமூகம் தார்மீக தெளிவின்மை மற்றும் அரசியல் புறக்கணிப்புக்கு எதிராக செயல்பட வலியுறுத்துகிறது.
காசா மற்றும் மேற்குக் கரையில் மீண்டும் மீண்டும் வன்முறை வெடிப்பது மற்றும் பட்டினி நிலையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை பிரேசில் விமர்சித்து, பாலஸ்தீன உரிமைகளைப் பாதுகாக்க அழைப்பு விடுக்கிறது.
இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களை எடுத்துக்காட்டி ஸ்பெயின், துருக்கி மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளும் இதில் தலையிட முயல்கின்றன.
இனப்படுகொலையைத் தடுக்கவும், மனிதாபிமான உதவிகளை அணுக அனுமதிக்கவும் ICJ முன்பு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.