தமிழ்நாட்டில் மிகவும் முதல் முறையாக, பொள்ளாச்சியில் (கோயம்புத்தூர் மாவட்டம்) தென்னை மர விவசாயிகள் அதிகரித்து வரும் வேர் வாடல் நோய் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பயிர்களின் உகந்த திறனை மதிப்பிடுவதற்கு என்று நிகழ்நேர பருவநிலை கண்காணிப்பு அமைப்புகளை நிறுவியுள்ளனர்.
இது பெங்களூரைச் சேர்ந்த பைடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
இந்த குறைந்த விலையிலான சூரிய சக்தியில் இயங்கும் உணரிகள் வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் சூரிய கதிர்வீச்சு ஆகியவற்றைக் கண்காணித்து, எதிர்காலப் பயிர் திட்டமிடல் மற்றும் பல்வகைப்படுத்தலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தைக் கொண்டுள்ளன.
பைட்டோபிளாஸ்மாவால் ஏற்படுகின்ற மற்றும் வெள்ளை ஈக்கள் மற்றும் இலை தத்திப் பூச்சிகள் போன்ற நோய்க் கிருமிகளால் பரவும் வேர் வாடல் நோய் ஆனது, இப்பகுதியில் தென்னை மரங்களை கடுமையாக பாதித்துள்ளது.
ஆனைமலை, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதால், ஏற்கனவே ஒரு லட்சம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.