TNPSC Thervupettagam

தென்மேற்குப் பருவமழை பின்வாங்குதல்

October 10 , 2019 2126 days 704 0
  • தென்மேற்குப் பருவமழையானது பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானின் சில பகுதிகளிலிருந்து பின் வாங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • இது வழக்கமான தேதியை விட கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகு (அக்டோபர் 9) பின்வாங்கியுள்ளது.
  • இந்தப் பருவமழையானது 2019 ஆம் ஆண்டிற்கு முன்னர் 1961 ஆம் ஆண்டில் மிகவும் தாமதமாக பின்வாங்கியது. 1961 ஆம் ஆண்டில் அக்டோபர் 1 அன்று பருவமழை பின்வாங்கத் தொடங்கியது.
  • பருவ மழையின் பின்வாங்கலுக்கான இரண்டு அத்தியாவசிய நிபந்தனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த பின்னர் இந்தப் பின்வாங்கல் அறிவிக்கப்பட்டது.
    • தொடர்ச்சியான எதிர் சூறாவளி சுழற்சி
    • ஈரப்பதத்தின் படிப்படியான குறைவு
  • காற்றின் திசையை மாற்றியமைத்தலானது ஈரப்பதத்தைக் குறைக்கும். மேலும் இது  வட இந்தியாவில் வெப்பநிலை வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்