TNPSC Thervupettagam

தெருநாய்கள் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

August 28 , 2025 28 days 50 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது, 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று தெருநாய்கள் தொடர்பான அதன் முந்தைய உத்தரவை மாற்றியமைத்தது.
  • தெருநாய்களைத் தற்போது குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு தடுப்பூசி போட்ட பிறகு அவற்றின் அசல் இடங்களுக்கு அவற்றைத் திருப்பி அனுப்பலாம்.
  • தெருநாய்களை விடுவிப்பதைத் தடைசெய்த முந்தைய உத்தரவு மறுஅறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • தீங்கிழைக்கும் வகையிலான அல்லது ரேபிஸ் தொற்று அறிகுறிகளைக் கொண்டுள்ள நாய்களை பொது இடங்களில் விடக்கூடாது.
  • உச்ச நீதிமன்றம் ஆனது தெருநாய்கள் குறித்த ஒரே மாதிரியான தேசியக் கொள்கைக்காக நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக இந்த வழக்கை விரிவுபடுத்தியது.
  • இந்தத் தேசியக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதில் உதவ அனைத்து மாநிலங்களும் ஒன்றியப் பிரதேசங்களும் வலியுறுத்தப்பட்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 என்ற தேதியிட்ட முந்தைய உத்தரவு, டெல்லியின் தேசியத் தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து தெருநாய்களையும் மீண்டும் விடுவிக்காமல் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
  • மாற்றியமைக்கப்பட்ட உத்தரவு, பொதுப் பாதுகாப்பு, விலங்கு நலன் மற்றும் போராட்டங்கள் மூலம் எழுப்பப்படும் உள்ளூர்ச் சிக்கல்களை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்