தெற்காசியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் திட்டம் - SACEP
November 8 , 2019 2108 days 828 0
வங்க தேசத்தின் டாக்காவில் நடைபெற்ற தெற்காசியச் சுற்றுச்சூழல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SACEP - South Asia Co-operative Environment Programme) 15வது கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன & காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்டார்.
இது இலங்கையின் கொழும்பு நகரைத் தலைமையிடமாகக் கொண்ட, அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அரசு அமைப்பாகும்.
இது ஆசியப் பகுதியில் சுற்றுச்சூழலின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் 1982 ஆம் ஆண்டில் தெற்காசியா அரசாங்கங்களால் நிறுவப்பட்டது.
SACEP அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் பிராந்தியக் கடல் திட்டத்தின் கீழ் வரும் தெற்காசியக் கடல் திட்டத்திற்கான செயலகமாகவும் SACEP செயல்படுகின்றது.