TNPSC Thervupettagam

தெற்காசியாவின் தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றம்

August 19 , 2021 1551 days 648 0
  • 2021 ஆம் ஆண்டிற்கான தெற்காசிய தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் மன்றத்தினுடைய 11வது வருடாந்திரச் சந்திப்பானது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரும், இம்மன்றத்தினுடையத் தலைவருமான சுசீல் சந்திரா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • இவரோடு தேர்தல் ஆணையர்கள் ராஜீவ்குமார் மற்றும் A.C. பாண்டே ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
  • இந்தக் காணொலி வாயிலான சந்திப்பானது பூடானின் தேர்தல் ஆணையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • தங்க முத்துக்களைக் கொண்ட இம்மன்றத்தின் சின்னமானது ஜனநாயகம், வெளிப்படைத் தன்மை, பாரபட்சமின்மை மற்றும் ஒத்துழைப்பின் நித்திய மதிப்புகளைக் குறிக்கிறது.
  • இந்தச் சந்திப்பானதுதேர்தல்களில் தொழில்நுட்பப் பயன்பாடு’ (Use of Technology in Elections) எனும் கருப்பொருளின் கீழ் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்