தெற்காசியாவில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான முதல் மையம்
August 13 , 2023 891 days 465 0
IUCN அமைப்பின் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான ஆணையமானது தெற்கு ஆசியாவில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான முதல் மையத்தை அமைப்பதற்காக இந்திய வனவிலங்கு அறக்கட்டளையுடன் (WTI) கை கோர்த்துள்ளது.
இது உலகில் உயிரினங்களின் ஏற்பமைவிற்கான 10வது மையமாகவும், தெற்கு ஆசியாவில் இவ்வகையிலான முதல் மையமாகவும் இருக்கும்.
இந்தியாவில் 92,037 வகையான விலங்கினங்கள் உள்ள நிலையில் அவற்றில் பூச்சி இனங்கள் மட்டும் 61,375 இனங்கள் ஆகும்.
இந்தியாவில் மட்டும், அந்த எண்ணிக்கையின் இரண்டு மடங்கிலான உயிரினங்கள் இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் உள்ளன.
இது இயற்கைக்கான மதிப்பினை வழங்கும் மற்றும் அதனை நன்குப் பாதுகாக்கும் வகையிலான ஒரு உலகத்தை உருவாக்குவதற்கான ஒரு குறிக்கோளுடன் உருவாக்கப் படுகிறது.
இந்த கூட்டு முன்னெடுப்பானது, வனவிலங்கு வல்லுநர்கள் மற்றும் சிறப்பு வல்லுநர் குழுக்களின் வளங்காப்பு முயற்சிகளை மேம்படுத்துவதையும், இந்தியாவின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.