TNPSC Thervupettagam

தெற்கு ஆசியாவின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு

March 12 , 2021 1609 days 639 0
  • சமீபத்தில் உலக வங்கியானது “செழித்து வளரும் பகுதிகளுடன் இணைத்தல் :  தெற்கு ஆசியாவின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்து ஒருங்கிணைப்பின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” எனப்படும் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகியவற்றிற்கிடையே அதிக அளவிலான போக்குவரத்து இணைப்பானது இரு நாடுகளின் தேசிய வருமானத்தை அதிகரிக்கும்.
  • இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகியவற்றிற்கிடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பானது வங்கதேசத்தின் தேசிய வருமானத்தை 17% என்ற அளவிற்கும் இந்தியாவின் தேசிய வருமானத்தை 8% என்ற அளவிற்கும் உயர்த்தும் திறன் கொண்டது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • மேலும், இந்த அறிக்கையானது, இந்த இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற போக்குவரத்து இணைப்பானது இந்தியாவின் ஏற்றுமதியை 172% என்ற அளவிற்கு உயர்த்தும் என்றும் இந்தியாவிற்கான வங்கதேசத்தின் ஏற்றுமதியானது ஏறத்தாழ 3 மடங்கு அளவிற்கு அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்