தெற்கு ஆசியாவின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்து ஒருங்கிணைப்பு
March 12 , 2021 1619 days 644 0
சமீபத்தில் உலக வங்கியானது “செழித்து வளரும் பகுதிகளுடன் இணைத்தல் : தெற்கு ஆசியாவின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்து ஒருங்கிணைப்பின் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” எனப்படும் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகியவற்றிற்கிடையே அதிக அளவிலான போக்குவரத்து இணைப்பானது இரு நாடுகளின் தேசிய வருமானத்தை அதிகரிக்கும்.
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகியவற்றிற்கிடையே தடையற்ற போக்குவரத்து இணைப்பானது வங்கதேசத்தின் தேசிய வருமானத்தை 17% என்ற அளவிற்கும் இந்தியாவின் தேசிய வருமானத்தை 8% என்ற அளவிற்கும் உயர்த்தும் திறன் கொண்டது என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
மேலும், இந்த அறிக்கையானது, இந்த இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற போக்குவரத்து இணைப்பானது இந்தியாவின் ஏற்றுமதியை 172% என்ற அளவிற்கு உயர்த்தும் என்றும் இந்தியாவிற்கான வங்கதேசத்தின் ஏற்றுமதியானது ஏறத்தாழ 3 மடங்கு அளவிற்கு அதிகரிக்கச் செய்யும் என்றும் கூறுகின்றது.