தெற்கு தெற்கு ஒத்துழைப்புக்கான சர்வதேச தினம் - செப்டம்பர் 12
September 14 , 2022 1115 days 396 0
இது உலகளாவிய தெற்கு நாடுகளில் உள்ள மக்கள் மற்றும் நாடுகளிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தென் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் முன்னேற்றங்கள் குறித்து ஒரு விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதையும் இந்தத் தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தில் ஒரு சிறப்புப் பிரிவாக UNOSSC என்ற அமைப்பினை உருவாக்குவது குறித்த முன்மொழிவானது 1974 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முன்னிலைப்படுத்தப்பட்டது.