அண்டார்டிகாவைச் சூழ்ந்துள்ள தெற்குப் பெருங்கடல் ஆனது உலகளாவியப் பெருங் கடல்களில் சுமார் 25-30% பங்கினைக் கொண்டது.
இது மனிதனால் வெளியிடப்படும் கடல்சார் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 40 சதவீதத்தினை உட்கிரகிக்கிறது.
வலுவான மேற்கத்தியக் காற்று மற்றும் அதிகப் பசுமை இல்ல வாயுக்கள் ஆனது கார்பன் நிறைந்த ஆழ்கடல் நீரை மேற்பரப்புக்கு கொண்டு வந்து CO₂ வாயுவை வெளியிடும் என்று பருவநிலை மாதிரிகள் கணித்துள்ளன.
மாதிரிக் கணிப்புகளுக்கு மாறாக, 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து பதிவு செய்யப்பட தகவல்கள் இது அதிக கார்பனை உறிஞ்சுவதைக் காட்டுகின்றன.
மழைப்பொழிவு, கடல் பனி இடமாற்றம் மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவற்றில் இருந்து வரும் நன்னீர் ஆனது கார்பன் நிறைந்த நீரை மேற்பரப்பிலிருந்து 100-200 மீ கீழே தக்க வைத்து, மேற்பரப்பு அடுக்குகளை வலுப்படுத்தியுள்ளது.
1990 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழ்கடல் நீர் சுமார் 40 மீட்டர் உயர்ந்து, நிலத்தடி CO₂ அழுத்தத்தை ~10 நுண்ணிய வளிமண்டலங்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதில் மேற்பரப்பு அடுக்கு மெலிந்து, வளிமண்டலத்தில் ஆழ் கடல் CO₂ நிறைந்த நீரை மேலெழும்பச் செய்தால் கார்பன் உட்கிரகிப்பு பலவீனமடையக் கூடும்.