TNPSC Thervupettagam

தெற்குப் பெருங்கடல் கார்பன் 'முரண்பாடு' ஆய்வு

December 24 , 2025 14 hrs 0 min 27 0
  • அண்டார்டிகாவைச் சூழ்ந்துள்ள தெற்குப் பெருங்கடல் ஆனது உலகளாவியப் பெருங் கடல்களில் சுமார் 25-30% பங்கினைக் கொண்டது.
  • இது மனிதனால் வெளியிடப்படும் கடல்சார் கார்பன் டை ஆக்சைடில் சுமார் 40 சதவீதத்தினை உட்கிரகிக்கிறது.
  • வலுவான மேற்கத்தியக் காற்று மற்றும் அதிகப் பசுமை இல்ல வாயுக்கள் ஆனது கார்பன் நிறைந்த ஆழ்கடல் நீரை மேற்பரப்புக்கு கொண்டு வந்து CO வாயுவை வெளியிடும் என்று பருவநிலை மாதிரிகள் கணித்துள்ளன.
  • மாதிரிக் கணிப்புகளுக்கு மாறாக, 2000 ஆம் ஆண்டுகளில் இருந்து பதிவு செய்யப்பட தகவல்கள் இது அதிக கார்பனை உறிஞ்சுவதைக் காட்டுகின்றன.
  • மழைப்பொழிவு, கடல் பனி இடமாற்றம் மற்றும் பனிப்பாறை உருகுதல் ஆகியவற்றில் இருந்து வரும் நன்னீர் ஆனது கார்பன் நிறைந்த நீரை மேற்பரப்பிலிருந்து 100-200 மீ கீழே தக்க வைத்து, மேற்பரப்பு அடுக்குகளை வலுப்படுத்தியுள்ளது.
  • 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து ஆழ்கடல் நீர் சுமார் 40 மீட்டர் உயர்ந்து, நிலத்தடி CO அழுத்தத்தை ~10 நுண்ணிய வளிமண்டலங்கள் அளவிற்கு அதிகரித்துள்ளது.
  • இதில் மேற்பரப்பு அடுக்கு மெலிந்து, வளிமண்டலத்தில் ஆழ் கடல் CO நிறைந்த நீரை மேலெழும்பச் செய்தால் கார்பன் உட்கிரகிப்பு பலவீனமடையக் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்