TNPSC Thervupettagam
March 16 , 2026 14 hrs 0 min 35 0
  • இஸ்ரேல்-ஈரான் மோதலின் போது எண்ணெய் ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தால் வளி மண்டலத்தில் கலந்த மாசுபடுத்திகள் காரணமாக, தெஹ்ரான் குடியிருப்பாளர்கள் "கருப்பு மழையை" எதிர்கொண்டனர்.
  • கருப்பு மழை என்பது பெரிய தீ விபத்துகள் அல்லது வெடிப்புகளிலிருந்து வெளியேறும் கரி, சாம்பல், எண்ணெய் துகள்கள் மற்றும் தொழில்துறை வேதிப்பொருட்களால் மாசு பட்ட மழைநீர் ஆகும்.
  • புகை, ஹைட்ரோகார்பன்கள், சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் சேர்மங்கள் நிறைந்த மாசுபட்ட காற்றின் வழியாக மழைநீர் கடந்து வரும்போது இது உருவாகிறது.
  • இது சுவாசப் பிரச்சனைகள், தோல் எரிச்சல், தலைவலி மற்றும் ரசாயனத் தீக் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்து உள்ளது.
  • பென்சீன் போன்ற வேதிப்பொருட்களின் நீண்டகால வெளிப்பாடு என்பது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்