இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 09 ஆம் தேதியன்று ஈரானின் தெஹ்ரானில் முதல் முத்தரப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தின.
தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இதில் சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்குப் போக்குவரத்து வழித் தடம் (INSTC) ஆகியவற்றை அதிக அளவில் பயன்படுத்துவதன் வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.
கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை இந்தியாவுடன் வர்த்தகத்தினை அதிகரிக்கவும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை அணுகுவதற்கும் சபாஹர் துறைமுகத்தைப் பயன்படுத்துவதில் ஆர்வம் தெரிவித்தன.
சந்தை அணுகலை விரிவுபடுத்துவதற்கும், அருமண் தாதுக்கள் உட்பட முக்கிய பொருட்களைப் பெறுவதற்கும் யூரேசியப் பொருளாதார ஒன்றியத்துடன் இந்தியா ஓர் ஆரம்ப தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) பின்பற்றுகிறது.