தேசிய PM சுவநிதி (PM SVANidhi) விருதுகள் - ஆந்திரப் பிரதேசம்
November 25 , 2026 13 hrs 0 min 9 0
புதுதில்லியில் நடைபெற்ற சுவநிதி சம்மான் விருதுகள் விழாவில், பிரதமரின் தெருவோர வியாபாரிகள் தற்சார்பு நிதி (PM SVANidhi) திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசம் ஏழு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த விருதுகளில் மூன்று மாநில அளவிலான விருதுகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான (ULBs) நான்கு விருதுகளும் அடங்கும்.
சிறப்பு முகாம்களில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்தையும், கடன் வழங்குவதில் இரண்டாம் இடத்தையும், ஒட்டுமொத்த செயல்பாட்டில் மூன்றாம் இடத்தையும் பிடித்து உள்ளது.
கடன் வழங்குவதில் கடப்பா மாநகராட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்தது; 'சுவநிதி சே சம்ரித்தி' (SVANidhi Se Samriddhi) பிரிவில் இராமச்சந்திரபுரம் நகராட்சி முதலிடத்தையும், அமலாபுரம் நகராட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் விஜயநகரம் மாநகராட்சி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
பி.எம். சுவநிதி என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் மத்தியத் துறைத் திட்டமாகும், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) இதன் செயல்படுத்தும் கூட்டாளராக உள்ளது.
இது தெருவோர வியாபாரிகளுக்கு நடைமுறை மூலதனக் கடன்கள், சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டுக்கு 7% வட்டி மானியம் மற்றும் தகுதியான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாதம் ₹50–₹100 கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது.