TNPSC Thervupettagam

தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் 2026

May 14 , 2026 16 hrs 0 min 2 0
  • சர்வதேச செவிலியர் தினத்தை (மே 12) முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டு மே 12 அன்று ராஷ்டிரபதி பவனில் 15 செவிலியர் பணியாளர்களுக்கு தேசிய ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
  • துணை செவிலியர் பேறுகால உதவியாளர்கள் (ANMs), பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள், செவிலியர் அதிகாரிகள் மற்றும் செவிலியர் கல்வியாளர்களின் சேவையைப் பாராட்டும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • லட்சத்தீவைச் சேர்ந்த ஆயிஷா பீபி கே, 2026-ஆம் ஆண்டில் ஒரு தொலைதூரத் தீவில் நள்ளிரவில் சிக்கலான பிரசவத்தைக் கையாண்டதற்காக இவ்விருதைப் பெற்றார்.
  • லடாக்கைச் சேர்ந்த குல்விந்தர் பர்ஹி, உயரமான மலைப்பகுதிகளில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் செவிலியர் சேவையாற்றியதற்காக கௌரவிக்கப்பட்டார்.
  • விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் தகுதிச் சான்றிதழ், பதக்கம் மற்றும் ₹1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்