TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் தினம் 2025 - அக்டோபர் 10

October 15 , 2025 16 days 42 0
  • அக்டோபர் 09 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட உலக அஞ்சல் தினத்தின் நீட்டிப்பாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் போது டல்ஹௌசி பிரபுவால் 1854 ஆம் ஆண்டில் இந்தியாவின் அஞ்சல் அமைப்பு நிறுவப்பட்டது.
  • தற்போது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இத்துறை உலகின் மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் அஞ்சல் வலையமைப்பாகும்.
  • இந்திய அஞ்சல் சேவையானது அஞ்சல் விநியோகம், பண அஞ்சல்கள், சேமிப்புத் திட்டங்கள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய விநியோகம் மற்றும் MGNREGA ஊதிய விநியோகத்தை வழங்குகிறது.
  • இந்தியாவில் 23 அஞ்சல் வட்டங்கள் மற்றும் இராணுவ அஞ்சல் சேவை உட்பட 9 மண்டலங்கள் உள்ளன.
  • 6 இலக்க அஞ்சல் குறியீட்டு எண் (PIN) குறியீடு முறையானது 1972 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்