TNPSC Thervupettagam

தேசிய அஞ்சல் வாரம் 2026 – அக்டோபர் 09-15

October 14 , 2026 8 days 102 0
  • அக்டோபர் 09 அன்று உலக அஞ்சல் தினத்துடன் தொடங்கி, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 09 முதல் 15 வரை தேசிய அஞ்சல் வாரத்தை அஞ்சல் துறை (DoP) கொண்டாடுகிறது.
  • 2026 ஆம் ஆண்டின் உலக அஞ்சல் தினத்திற்கான கருத்துரு “One Postal Network, Infinite Possibilities” என்பதாகும்.
  • குடிமக்களை இணைப்பதிலும், நிதி உள்ளடக்கத்தை ஆதரிப்பதிலும் மற்றும் அஞ்சல் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதிலும் இந்திய அஞ்சல் துறையின் பங்கை முன்னிலைப்படுத்துவதை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • N-Gen அஞ்சல் நிலையங்கள் மற்றும் ஜன் சேவா கனெக்ட் (Jan Sewa Connect) அஞ்சல் நிலையங்கள் ஆகியவை நவீன மற்றும் உள்ளடக்கிய அஞ்சல் சேவை மையங்களை உருவாக்குவதற்கான முன்னெடுப்புகளாகும்.
  • டாக் சேவா (Dak Sewa) செயலி மற்றும் டாக் மித்ரா (Dak Mitra) செயலி ஆகியவை அஞ்சல் சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாகவும் வசதியானதாகவும் மாற்றுவதற்கு டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்