தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தொலைத்தொடர்பு துறை (DoT) ஆனது 2025 ஆம் ஆண்டு தேசிய அதிர்வெண் ஒதுக்கீட்டுத் திட்டத்தினை வெளியிட்டுள்ளது.
இது இந்தியாவில் ரேடியோ-அதிர்வெண் அலைக்கற்றையின் மேலாண்மை மற்றும் ஒதுக்கீட்டிற்கு உதவும்.
இந்தியாவின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) மேலாண்மை 'பதிலளிக்கக் கூடிய, அதிக செயல் திறன் கொண்ட மற்றும் உலகளாவியத் தரநிலைகளுடன் நன்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது 8.3 kHz முதல் 3000 GHz வரையிலான பல்வேறு ரேடியோ தொடர்பு சேவைகளுக்கு ரேடியோ-அதிர்வெண் அலைக்கற்றை ஒதுக்கீட்டை உள்ளடக்கும்.
உயர்-செயல்திறன் கொண்ட புவிநிலைச் சுற்றுப்பாதை (GSO) செயற்கைக் கோள்கள் மற்றும் பெரிய GSO அல்லாத செயற்கைக் கோள் திரள்களுக்கு (LEO/MEO) முக்கியமான செயற்கைக்கோள் அடிப்படையிலான சேவைகளுக்கான Ka, Q மற்றும் V கற்றைகளின் ஒதுக்கீட்டையும் NFAP உள்ளடக்கியது.