இந்தியா தனது முதலாவது தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலை (National Essential Diagnostics List - NEDL) தயாரித்துள்ளது.
இந்தப் பட்டியலானது இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையத்தால் இறுதி செய்யப் பட்டுள்ளது.
NEDL ஆனது 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் EDLஐ அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
இதன்மூலம், இது போன்ற ஒரு பட்டியலைத் தொகுத்த முதலாவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தப் பட்டியலானது கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பல்வேறு சுகாதார வசதிகள் தேவைப்படும் “நோயறிதல் சோதனைகளின் வகையைத் தீர்மானிப்பதற்காக” அரசிற்கு வழிகாட்டுதலை அளிக்கவிருக்கின்றது.
இந்தப் பட்டியலானது கிராமத்திலிருந்து மாவட்டம் வரையிலான வசதிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.