தேசிய அத்தியாவசிய மருத்துவ உதவி சாதனங்களின் பட்டியல்
September 20 , 2023 675 days 331 0
இந்திய மருத்துவ ஆராய்ச்சிச் சபையானது (ICMR) தேசிய அத்தியாவசிய உதவி சாதனங்களின் பட்டியலை (NLEAP) வெளியிட்டுள்ளது.
உடலியல் செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்ளவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமான உதவி சாதனங்களுக்கு முன்னுரிமை அளிக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
NLEAP ஆனது 21 அத்தியாவசிய உதவி சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
உடலியல் செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்ளவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அவை அடிப்படை கருவிகளாகக் கருதப்படுகின்றன.
உதவி சாதனங்கள் (Aps) செயல்பாட்டுக் குறைபாடுகள் உள்ள தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், அவர்கள் பிறரைச் சார்ந்திருக்கும் ஒரு நிலையை மாற்றுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.