இந்தியா தனது தேசிய அறிவு அமைப்பை (NKN - National Knowledge Network) வங்க தேசத்திற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
NKN என்பது அடுத்தத் தலைமுறைக்கான பயன்பாடுகள் மற்றும் சேவைகளை உருவாக்குதல், ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல் மற்றும் இந்தியாவின் தகவல் தொடர்பு கட்டமைப்பு வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கக்கூடிய பல ஜிகாபிட் கொண்ட ஒரு அகில இந்திய அமைப்பாகும்.
இது போன்ற ஒரு முன்னுதாரணமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், ஆய்வகங்கள், சுகாதார நிலையங்கள் வேளாண் நிலையங்கள் ஆகியவற்றை இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.