பெலாரஸிலிருந்து வரும் தொடர் பலூன் ஊடுருவல்களுக்குப் பிறகு லிதுவேனியா தேசிய அவசரநிலையை அறிவித்தது.
இந்த பலூன்கள் விமானப் போக்குவரத்தை சீர்குலைத்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் எல்லை சார் பாதுகாப்பை அச்சுறுத்தின.
பலூன் ஊடுருவல் சம்பவங்கள் காரணமாக வில்னியஸ் விமான நிலையம் பல முறை மூடப் பட்டது.
இராணுவம், காவல்துறை, எல்லைப் பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத்துறை பிரிவுகள் விரிவாக்கப்பட்ட அதிகாரங்களுடன் செயல்பட அனுமதிக்க அரசாங்கம் பாராளுமன்ற ஒப்புதலை நாடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) இந்த ஊடுருவல்களை லிதுவேனியாவிற்கு எதிரான கலப்பு முறைத் தாக்குதல் என்று விவரித்தது.