அரசு தனது தேசிய ஆகாய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை அறிவித்திருக்கின்றது. இதில் அரசின் முக்கிய நோக்கம் என்பது 2025-ம் ஆண்டிற்குள் உலகின் முன்னணி ஐந்து ஆகாய சரக்குப் போக்குவரத்து சந்தையில் இந்தியாவை ஒரு நாடாக்க முனைவதாகும்.
இந்தக் கொள்கை ஆவணம் மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் உலகளாவிய விமானப் போக்குவரத்து மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்த கொள்கை விமானப் போக்குவரத்துத் துறையில் வளர்ச்சியை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்.