TNPSC Thervupettagam

தேசிய ஆசிரியர்கள் தினம் 2026 – செப்டம்பர் 5

September 9 , 2026 4 days 107 0
  • டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 அன்று ஆசிரியர்கள் தினத்தைக் கொண்டாடுகிறது.
  • டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 அன்று தமிழ்நாட்டின் திருத்தணியில் பிறந்தார் என்பதோடு இவர் ஒரு தத்துவஞானி, அறிஞர் மற்றும் கல்வியாளர் ஆவார்.
  • இவர் இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும் (1952–1962) இரண்டாவது குடியரசுத் தலைவராகவும் (1962–1967) பணியாற்றினார்.
  • துணைக் குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சோவியத் யூனியனுக்கான இந்தியத் தூதராகப் (1949–1952) பணியாற்றினார்.
  • இவர் 1954 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருதைப் பெற்றார், மேலும் 1963 ஆம் ஆண்டில் ஐக்கிய பேரரசால் ஆர்டர் ஆஃப் மெரிட் விருதும் வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்