மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் இராம் விலாஸ் பஸ்வான்தேசிய ஆய்வக இயக்குநரகத்தைத் துவக்கி வைத்தார்.
இது இந்திய தேசிய தரங்களுக்கான அமைப்பாலும் இந்திய தரங்களுக்கான நிறுவனத்தாலும் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு நிகழ்நேர இயங்குதளம் ஆகும்.
அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கப்படத் தேவைப்படும் தொழிற்சாலைகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இதர அனைத்துப் பங்குதாரர்களின் அனைத்து ஆய்வக தேவைகளுக்கும் ஒரே இடத்தில் தங்கள் ஆய்வு வசதிகளை அனைத்து வசதிகளுடன் கிடைக்கப் பெறும் ஒரு தளம் இதுவாகும்.
இந்த இயக்குநரகத்தின் மூலமாக 4500 ஆய்வகங்கள் இணைக்கப் பட்டிருக்கின்றன. (ஆய்வு மூலம் அளவீட்டு சோதனைச் சாலைகளுக்கான தேசியச் சான்றளிப்பு மன்றம் சான்றளித்த ஆய்வகங்கள், பெருமைமிகு ஆய்வகங்கள், தனித்தன்மை வாய்ந்த ஆய்வகங்கள்).
தயாரிப்புப் பொருட்கள், சர்வதேசத் தரங்கள் போன்றவற்றைக் கொண்டு பல்வேறு ஆய்வகங்களுக்கான அனைத்து ஆய்வக வசதிகளையும் இங்கு தேட முடியும்.