தேசிய இ-விதான் செயலிக்கான தேசிய நெறிபடுத்தும் பயிற்சிப் பட்டறை
September 25 , 2018 2516 days 2208 0
இரண்டு நாள் தேசிய அளவிலான தேசிய இ-விதான் செயலி (National e-Vidhan Application-NeVA) நெறிபடுத்தும் பயிற்சிப் பட்டறையை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்.
தேசிய இ-விதான் ஆனது சட்டசபையின் அன்றாட செயல்பாடுகள் பற்றிய தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்கக்கூடிய டிஜிட்டல் செயலியாகும்.
இது சட்டமன்றங்களின் அனைத்து அவைகளையும் டிஜிட்டல் தளத்தில் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட ரூ. 739 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டமாகும்.
இது சட்டமன்றத்தாலும் அனைத்து அரசுத் துறைகளாலும் பயன்படுத்தப்படும்.
இ-விதான்
இ-விதான் என்பது குறிக்கோள் சார்ந்த திட்டமாகும். இது மாநிலங்களின் சட்டமன்றங்களை காகிதமற்ற டிஜிட்டல் முறையில் செயல்படும் விதத்தில் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் பகுதியான இது பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தை அதிகாரப்பூர்வ செயலாண்மையாகக் கொண்டது.
இந்த அமைச்சகமானது ‘ஒரு நாடு ஒரு செயலி’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஒரே தளத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகள் உட்பட அனைத்து 40 அவைகளையும் கொண்டு வரக்கூடிய NeVA என்ற திட்டத்தை இ-விதானாக அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.