TNPSC Thervupettagam

தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு 2022

April 19 , 2022 1203 days 480 0
  • மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC - Central Board of Indirect Taxes and Customs) சமீபத்தில் நடத்தப்பட்ட இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (TRS - Time Release Studies) குறித்த ஒரு தொகுப்பு அறிக்கையை வெளியிட்டது.
  • இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீடு என்பது செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு கருவியானதோடு, இது சர்வதேச வர்த்தகத்தின் சரக்கு இசைவு செயல்முறையை மதிப்பிடுகிறது.
  • உலக வர்த்தக அமைப்பானது, உலக சுங்க அமைப்பு மற்றும் வர்த்தக வசதி ஒப்பந்தம் ஆகியவற்றின் கீழ் இந்த ஆய்வு முறையைப் பரிந்துரைக்கிறது.
  • இந்தச் செயல்முறையானது, சரக்குகளின் சராசரி வெளியீட்டு நேரத்தை, அதாவது சரக்குப் பொருள் சுங்க நிலையத்தை வந்தடைவதற்கும் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செயல்முறைக்கு அனுப்பப் படுவதற்கும் ஆகும் நேரத்தைப் பொருத்து அமைகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்