தேசிய இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு 2022
April 19 , 2022 1225 days 488 0
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC - Central Board of Indirect Taxes and Customs) சமீபத்தில் நடத்தப்பட்ட இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீட்டு ஆய்வு (TRS - Time Release Studies) குறித்த ஒரு தொகுப்பு அறிக்கையை வெளியிட்டது.
இசைவு வழங்கலுக்கான நேர மதிப்பீடு என்பது செயல்திறனை அளவிடுவதற்கான ஒரு கருவியானதோடு, இது சர்வதேச வர்த்தகத்தின் சரக்கு இசைவு செயல்முறையை மதிப்பிடுகிறது.
உலக வர்த்தக அமைப்பானது, உலக சுங்க அமைப்பு மற்றும் வர்த்தக வசதி ஒப்பந்தம் ஆகியவற்றின் கீழ் இந்த ஆய்வு முறையைப் பரிந்துரைக்கிறது.
இந்தச் செயல்முறையானது, சரக்குகளின் சராசரி வெளியீட்டு நேரத்தை, அதாவது சரக்குப் பொருள் சுங்க நிலையத்தை வந்தடைவதற்கும் இறக்குமதி அல்லது ஏற்றுமதி செயல்முறைக்கு அனுப்பப் படுவதற்கும் ஆகும் நேரத்தைப் பொருத்து அமைகிறது.