தேசிய இரயில் திட்டமானது 2030 ஆம் ஆண்டில் எதிர்காலத் தயார்நிலை இரயில்வே அமைப்பை ஏற்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
மத்திய இரயில்வே துறை அமைச்சர் அவர்கள் தேசிய இரயில் திட்டமானது செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் வணிகக் கொள்கை முன்னெடுப்புகள் ஆகிய இரண்டின் அடிப்படையில் உத்திகளை வடிவமைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப் பட்டு உள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டமானது நாட்டில் உள்ள தேவையை முன்னிட்டுத் திறனை உருவாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது 2050 ஆம் ஆண்டு வரை எதிர்கால வளர்ச்சித் தேவையைப் பூர்த்தி செய்யும்.
மேலும் இது சரக்குப் போக்குவரத்தில் இரயில்வேயின் முதன்மையான பங்கை 45% பங்கு என்ற அளவிற்கு அதிகரிக்க எண்ணுகின்றது.