TNPSC Thervupettagam

தேசிய இரைச்சல் மாசுபாட்டு வரைபடம்

March 20 , 2019 2301 days 687 0
  • நாடு முழுவதும் இரைச்சல் மாசுபாட்டு வரைபடத்தைத் தயாரிக்கவும் இரைச்சல் குறித்த பிரச்சனைக்குத் தீர்வைக் காண ஒரு திட்டத்தைத் தயாரிக்கவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (CPCB - Central Pollution Control Board) தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal - NGT) அறிவுரைகளை வழங்கியுள்ளது.
  • இரைச்சல் மாசுபாட்டு விதிகளை செயல்படுத்தாத காரணத்தினால் குடிமக்களின் (பொதுவாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள்) ஆரோக்கியம் பாதிக்கிறது என்று NGT கூறியுள்ளது.
  • அனைத்து மாநில காவல் துறையினரும் அந்தந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களுடன் கலந்தாலோசித்து இரைச்சல் கண்காணிப்புக் கருவிகளை வாங்க வேண்டும் என்று NGT கூறியுள்ளது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
  • தேசியப் பசுமைத் தீர்ப்பாயமானது 2010 ஆம் ஆண்டில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயச் சட்டம், 2010-ன் படி உருவாக்கப்பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி அல்லது உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இத்தீர்ப்பாயத்தின் தலைவர் அல்லது நீதித் துறைசார் உறுப்பினராக செயல்படுவார்.
  • இந்தத் தீர்ப்பாயத்தின் தற்போதைய தலைவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான ஆதர்ஷ் குமார் கோயல் ஆவார்.
  • சுற்றுச் சுழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இதர இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் தொடர்பான வழக்குகளை திறம்பட விரைவாக தீர்த்து வைப்பதற்காக NGT உருவாக்கப்பட்டது.
  • NGT-ன் முதன்மை அமர்வானது புது தில்லியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்