தேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12
January 16 , 2021
1610 days
597
- இது சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ”தேசத்தைக் கட்டமைப்பதற்காக இளைஞர் சக்தியை வலுப்படுத்துதல்” என்பதாகும்.
- இவர் 1863 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் நரேந்திரநாத் தத்தா என்ற பெயரில் பிறந்தார்.
- 1985 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப் படுகின்றது.
- விவேகானந்தர் ராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ணா இயக்கத்தைத் தொடங்கினார்.
- இவர் 1893 ஆம் ஆண்டில் சிகாகோவில் உலக மதங்களின் நாடாளுமன்றத்தில் இந்துத்துவத்தை அறிமுகப் படுத்தினார்.
- ”அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே” என்ற இவருடைய உரைக்காக இவர் வெகு சிறப்பாக அறியப்படுகின்றார்.

Post Views:
597