TNPSC Thervupettagam

தேசிய இளைஞர் நாடாளுமன்றம்

January 16 , 2021 1584 days 559 0
  • பிரதமர் அவர்கள் தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
  • இது 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களின் கருத்தைக் கேட்பதற்காக வேண்டி ஒருங்கிணைக்கப் பட்டது.
  • இது சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை அனுசரிப்பதற்காக ஜனவரி 12 அன்று நடத்தப்பட்டது.
  • மேலும் இந்திய அரசானது சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகின்றது.
  • முதலாவது தேசிய இளைஞர் நாடாளுமன்றமானது ”புதிய இந்தியாவின் குரலாக இரு, தீர்வுகளைக் கண்டுபிடி  மற்றும் கொள்கைகளுக்குப் பங்களி” என்ற கருத்துருவின் கீழ் 2019 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சேவைத் திட்டமானது தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை ஒருங்கிணைக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்