பீகாரில் உள்ள ரக்சௌல் என்ற இடத்தில், மத்தியச் சுகாதாரம் & குடும்ப நலம் மற்றும் இரசாயனங்கள் & உரங்கள் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, FSSAI அமைப்பின் தேசிய உணவு ஆய்வகத்தைத் திறந்து வைத்தார்.
இந்தியா-நேபாளம் இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், நேபாளத்தில் இருந்து ரக்சௌலுக்கு இறக்குமதி செய்யப்படும் உணவு மாதிரிகளின் சோதனை நேரத்தைக் குறைக்க இந்த ஆய்வகம் நிறுவப்பட்டது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) என்பது இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப் பூர்வ அமைப்பாகும்.
FSSAI ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 என்பதின் கீழ் நிறுவப் பட்டது.