2021 ஆம் ஆண்டு தேசிய உணவுத் தொழில்நுட்பக் கல்வி தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் மசோதாவினைப் பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்த மசோதாவானது மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது ஏற்கனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு விட்டது.
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் தொழில்துறை அமைச்சர் பசுபதி குமார் பராஸ் என்பவர் இந்த மசோதாவினை முன்வைத்தார்.
இந்த மசோதாவானது உணவுத் தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் தொழில் முனைவு கல்வி நிறுவனங்களுக்கு வேண்டிய பல்வேறு விதிமுறைகளை வழங்கச் செய்கிறது.
இந்த மசோதாவானது அறிமுகப்படுத்தப்பட்டு 8 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டு சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
மேலும் தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் கண்ட்லியில் (ஹரியானா) அமைந்துள்ள தேசிய உணவுத் தொழில் நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனம் ஆகியவற்றைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களாகவும் அறிவிக்க இந்த மசோதா முனைகிறது.