தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான மாநில தரவரிசைக் குறியீடு
July 11 , 2022 1232 days 600 0
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டு மாநில தரவரிசைக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
பலன் வழங்கீட்டினை மேம்படுத்தும் முயற்சியில், மாநிலத்தில் நெகிழ்திறன்மிக்க உணவு முறைகளைக் கொண்டு வந்ததற்காக, ஒடிசா மாநிலம் இதில் முதலிடம் பிடித்தது.
பொதுப் பிரிவு சார்ந்த மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் 2வது இடத்திலும், ஆந்திரப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளது.
சிறப்புப் பிரிவு மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்களில், திரிபுரா முதலிடத்திலும், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
நேரடிப் பயன் பரிமாற்றம் (DBT) - பணம் வழங்கும் முறை செயலில் உள்ள 3 ஒன்றியப் பிரதேசங்களில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி & டாமன் மற்றும் டையூ ஆகியவை முதலிடத்தில் உள்ளன.