மத்திய அரசானது, டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியியல் கல்வி நிறுவனத்தில் (CSIR-IGIB) Phenome India எனும் தேசிய உயிரி வங்கியைத் தொடங்கியுள்ளது.
இந்த உயிரி வங்கியானது, சுமார் 10,000 என்ற அளவுப் பன்முகத் தன்மை கொண்ட இந்தியப் பங்கேற்பாளர்களிடமிருந்து மரபணு, வாழ்க்கை முறை மற்றும் மருத்துவத் தரவைச் சேகரிக்கும்.
இது ஐக்கியப் பேரரசின் உயிரி வங்கியை மாதிரியாகக் கொண்டுள்ளது.
இது ஆரம்பகால நோய்களை கண்டறிதல் மற்றும் நீரிழிவு, புற்றுநோய் மற்றும் அரிய மரபணு கோளாறுகள் போன்ற பாதிப்புகளுக்கு வேண்டி நன்கு தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது மத்திய உடல் பருமன் மற்றும் மிகச் சிக்கலான பல்வேறு பாதிப்பு அறிகுறிகளைக் கொண்ட பாதிப்புகள் போன்ற இந்தியாவினைச் சார்ந்த சுகாதாரப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.