தேசிய உற்பத்தித் தொழில்துறைப் புத்தாக்க ஆய்வு 2021-22
May 4 , 2023 824 days 378 0
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, “தேசிய உற்பத்தித் தொழில்துறைப் புத்தாக்க ஆய்வு 2021-22: கொள்கை வகுப்பாளர்களுக்கான தொகுப்பு” என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது இந்திய உற்பத்தித் தொழில்துறையின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கை அதிகரிப்பதற்கும் முன்னுரிமையை அளித்துள்ளது.
இது நிறுவன அளவிலான ஆய்வு மற்றும் துறைசார் புத்தாக்க அமைப்புகள் (SSI) சார்ந்த ஆய்வு ஆகிய இரண்டு முக்கியக் கூறுகளைக் கொண்டுள்ளது:.
நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட புத்தாக்கம் மற்றும் புத்தாக்கம் மிக்க நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளை நிறுவன அளவிலான ஆய்வு சேகரித்துள்ளது.
துறைசார்ப் புத்தாக்க அமைப்புகள் (SSI) சார்ந்த ஆய்வானது, உற்பத்தித் தொழில்துறை சார்ந்தப் புத்தாக்க அமைப்பு மற்றும் நிறுவனங்களில் புத்தாக்கங்களை அடைவதில் அதன் பங்கு ஆகியவற்றினை மதிப்பிட்டுள்ளது.