தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் NATGRID கையெழுத்திட்டுள்ளது.
இது முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் திருடப்பட்ட வாகனங்கள் பற்றிய விவரங்களைப் பெறுவதற்காக வேண்டி மையப்படுத்தப்பட்ட நிகழ்நேர அளவிலான இணையக் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு மீதான கணினிக் கட்டமைப்புகளின் தரவுதளத்தை அணுகுவதாகும்.
இத்தரவுதளத்திற்கான அணுகலுடன், NATGRID அமைப்பானது உளவுத்துறை மற்றும் விசாரணை நிறுவனங்களுக்கிடையேயான ஓர் இணைப்பாகச் செயல்படும்.
இது நாடு முழுவதிலுமிருக்கும் 14,000 காவல் நிலையங்களின் தரவுகளுக்கு இடையில் ஓர் இணைப்பை வழங்கும்.
ஆனால் மாநில காவல்துறை இதன் ஒரு பகுதியாக இருக்காது.
இது 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு முன்மொழியப்பட்டது.