தேசிய ஊக்க மருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா 2025
July 26 , 2025
12 hrs 0 min
10
- விளையாட்டுத் துறை அமைச்சர் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (திருத்தம்) மசோதா 2025 என்ற மசோதாவை அவையில் தாக்கல் செய்தார்.
- உலக ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) கோரிய மாற்றங்களை இது இணைக்க முயல்கிறது.
- நாட்டின் ஊக்க மருந்து எதிர்ப்பு முகமையின் (NADA) செயல்பாட்டில் "அரசாங்கத்தின் தலையீட்டை" WADA அமைப்பு ஆட்சேபித்தது.
- இந்தச் சட்டம் முதலில் 2022 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
- ஆனால் WADA எழுப்பிய ஆட்சேபனைகள் காரணமாக அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்க வேண்டியிருந்தது.
- விளையாட்டுகளில் ஊக்க மருந்து பயன்பாடுகளின் எதிர்ப்புக்கான தேசிய வாரியத்தை நிறுவுவதற்கு இது ஆட்சேபனை தெரிவித்தது.
- ஊக்க மருந்து எதிர்ப்பு விதிமுறைகள் குறித்து அரசாங்கத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்கு அதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
- இந்த வாரியம் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- இது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் (NADA) செயல்பாடுகளை மேற் பார்வையிடவும், அதற்கான வழிமுறைகளை வழங்கவும் அங்கீகரிக்கப் பட்டது.
- ஒரு தன்னாட்சி அமைப்பில் அரசாங்கத்தின் தலையீடு என்று கூறி WADA அமைப்பு இந்த விதியை நிராகரித்தது.
- ஆனால் திருத்தப்பட்ட மசோதாவில் இந்த வாரியம் குறித்த விதிமுறைகள் தக்க வைக்கப் பட்டுள்ளன.
- ஆனால் அது NADA அமைப்பை மேற்பார்வையிடும் அதிகாரங்களையோ அல்லது அதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட ஆலோசனை வழங்கீட்டுப் பாத்திரங்களையோ கொண்டிராமல் உள்ளது.

Post Views:
10