மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள எரிசக்தி திறன் வாரியம் (BEE) ஆனது, 35வது தேசிய எரிசக்தி வளங்காப்பு விருதுகளுக்கான (NECA-2025) விண்ணப்பங்களை அழைத்து உள்ளது.
தொழில்துறைகள், கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் நிறுவனங்கள் முழுவதும் எரிசக்தி திறன் மற்றும் வளங்காப்பிற்கான சிறந்தப் பங்களிப்புகளை NECA அங்கீகரிக்கிறது.
2025 ஆம் ஆண்டு விருதுகள் ஆனது டிஜிட்டல் உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் எரிசக்தி வளங்காப்பு விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களுக்கென ஒரு புதிய பிரிவினை அறிமுகப்படுத்துகிறது.