TNPSC Thervupettagam

தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பு

February 16 , 2019 2361 days 731 0
  • தேசிய எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்திட மத்திய அரசு திட்டமிட்டிருக்கின்றது.
  • 2006 ஆம் ஆண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை மன்றச் சட்டத்தின் கீழ், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (Petroleum and Natural Gas Regulatory Board - PNGRB) ஒரு ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
  • இது பிராந்தியப் பகுதிகளில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நிறுவனங்களுக்கு அனுமதியளிப்பு அங்கீகாரத்தை வழங்கும்.
  • தேசிய வரிவாயு விநியோகக் கட்டமைப்பின் நோக்கங்கள் பின்வருமாறு
    • இயற்கை எரிவாயுவை அணுகுவதில் நாட்டிற்குள் இருக்கும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளை களைவது மற்றும் நாடு முழுவதும் சுத்தமான மற்றும் பசுமையான எரிபொருளை வழங்குவது.
    • எரிபொருள் தேவைப்படும் இடங்களை எரிவாயுவின் மூல இடங்களுடன் இணைப்பது மற்றும் பலதரப்பட்ட துறைகளில் உள்ள நுகர்வோர்களுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதி செய்வது.
    • அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விநியோகத்திற்காக பல்வேறு நகரங்களில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துவது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்