TNPSC Thervupettagam

தேசிய ஒட்டக நிலைத் தன்மை முன்னெடுப்பு

October 10 , 2025 14 hrs 0 min 16 0
  • மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் ஆனது, தேசிய ஒட்டக நிலைத் தன்மை முன்னெடுப்பினைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தியாவின் ஒட்டக எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சரிவை நிவர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1977 ஆம் ஆண்டில் சுமார் 11 லட்சமாக இருந்த இந்தியாவின் ஒட்டக எண்ணிக்கை என்பது 2019 ஆம் ஆண்டில் 2.52 லட்சமாகக் குறைந்துள்ளது.
  • சுமார் 90% ஒட்டகங்கள் ஆனது இராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன.
  • இது சட்ட சீர்திருத்தங்கள், சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு மற்றும் ஒட்டகங்களுக்கான மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத்தினை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றை முன்மொழிகிறது.
  • ஜூன் 22 ஆம் தேதியன்று உலக ஒட்டக தினத்தைக் கொண்டாடுவது உள்ளிட்ட விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்