TNPSC Thervupettagam

தேசிய ஒருங்கிணைப்பு தினம் 2025 - நவம்பர் 19

November 26 , 2025 15 hrs 0 min 21 0
  • இது இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியின் பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • இந்த நாள் அனைத்து மக்களிடையே ஒற்றுமை, சமத்துவம், அமைதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்திரா காந்தி 1966–1977 மற்றும் 1980–1984 ஆம் ஆண்டு வரை பிரதமராகப் பணி ஆற்றினார்.
  • 1971 ஆம் ஆண்டில், 26வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி, அரசியலமைப்பின் 291 மற்றும் 362 ஆகிய சரத்துகளின் கீழ் அரச மானிய (முன்னாள் இளவரசர்களுக்கு பணம் செலுத்துதல்) முறையினை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
  • 1975 ஆம் ஆண்டில், வறுமையைக் குறைத்தல், கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச் சூழலை ஆதரித்தல் ஆகியவற்றிற்காக இருபது அம்சத் திட்டத்தைத் தொடங்கினார்.
  • அவரது "கரிபி ஹடாவோ" (வறுமையை நீக்குதல்) என்ற முழக்கம் நலத்திட்டங்களுக்கு வழிகாட்டியதோடு, ஏழைகளுக்கு உதவ ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1974–1979) மாற்றங்களைச் சேர்த்தது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்