சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவு கூரும் வகையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31 ஆம் தேதியன்று தேசிய ஒருமைப்பாட்டு தினம் கொண்டாடப் படுகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல் அவர்களின் 150வது பிறந்தநாளை 2025 ஆம் ஆண்டு குறிக்கிறது.
சுதந்திரத்திற்குப் பிறகு 560க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
2025 ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டுத் தினத்திற்கான கருத்துரு, "Ek Bharat, Aatma nirbhar Bharat" என்பதாகும்.