தேசிய ஒற்றுமை தினம் - அக்டோபர் 31
October 31 , 2020
1744 days
572
- இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இது 2014 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இவர் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமரும் முதல் உள்துறை அமைச்சரும் ஆவார்.
- ஏறக்குறைய 560 சுதேச மாநிலங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைப்பதில் படேல் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
- 2018 ஆம் ஆண்டில் படேலின் 143வது ஆண்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் ஒற்றுமைக்கான சிலையைத் திறந்து வைத்தார்.
- இது உலகின் மிக உயரமான சிலை ஆகும். இது 182 மீட்டர் (597 அடி) உயரம் கொண்டது ஆகும்.
- இது நர்மதை ஆற்றில் கெவடியா பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது சர்தார் சரோவர் அணையைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

Post Views:
572