மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தேசிய ஒற்றைச் சாளர அமைப்பினை (National Bingle Window System – NSWS) தொடங்கி வைத்தார்.
இது முதலீட்டாளர்கள் மற்றும் வணிகங்களுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
NSWS என்பது அரசின் ஒப்புதல்களையும் அனுமதிகளையும் பெறுவதற்கு என்று முதலீட்டாளர்கள் அல்லது தொழில் முனைவோருக்கான ஒரே தீர்வாக செயல்படும் ஓர் ஒற்றைச் சாளரத் தளமாகும்.
இந்தத் தளமானது இன்வெஸ்ட் இந்தியா அமைப்புடன் இணைந்து தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறையினால் உருவாக்கப்பட்டது.