ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது தேசிய ஓய்வூதிய முறையில் (National Pension System – NPS) பதிவு செய்வதற்கான வயது வரம்பினை 65 வயதிலிருந்து 70 வயதாக உயர்த்தியுள்ளது.
இதற்கு முன்பு NPS முறையில் முதலீடு செய்வதற்கான வயது வரம்பு 18 முதல் 65 வயதாக இருந்தது.
இது தற்போது 18 முதல் 70 வயதாக திருத்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட விதிமுறைகளின் படி, தமது 65 முதல் 70 வரையிலான வயதுகளில் உள்ள இந்தியாவில் வசிக்கின்ற இந்தியக் குடிமகன் (அ) வெளிநாட்டில் வசிக்கின்ற இந்தியக் குடிமகன், வெளிநாடு வாழ் இந்தியக் குடிமக்கள் போன்ற எவரும் NPS அமைப்பில் இணைந்து தனது 75வது வயது வரை NPS கணக்கினைத் தொடரலாம் அல்லது ஒத்தி வைக்கலாம்.
ஒரு நபர் 65 வயதிற்குப் பிறகு NPS முறையில் இணைந்தால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாதாரணமாக வெளியேறலாம் (Normal Exit).